சென்னையில் 7 பள்ளிகள் தனியார் மயம். மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்.

chennai schoolsசென்னையில் உள்ள 7 அரசுப் பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்க சமீபத்தில் முடிவு செய்துள்ள மாநகராட்சி நிர்வாகத்திற்கு மார்க்கிஸ்ட் கம்யூனிஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளன.  

இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், “அரசு-தனியார் கூட்டு மாதிரிப் பள்ளிகளுக்கு தமிழகத்தில் இடமில்லை என்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அளித்த உறுதிக்கு எதிராக, 7 அரசு பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு கல்வி அளிக்கும் பொறுப்பை அரசு படிப்படியாக கைவிட்டு, தனியார் கொள்ளைக்கு வழிவகுப்பதாக குறிப்பிட்டுள்ள ஜி.ராமகிருஷ்ணன், மாநகராட்சிப் பள்ளிகளை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவையும், ஆசிரியர்களை பணிமாற்றம் செய்யும் முடிவையும் கைவிட வேண்டும்.

இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply