ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் கத்தி திரைப்படத்தின் ஏழு சண்டைக்காட்சிகள் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
அழகிய தமிழ்மகன் படத்திற்கு பின்னர் இரட்டை வேடத்தில் நடிக்கும் விஜய், கதாநாயகன் மற்றும் வில்லனாகவும் நடிக்கிறார். இந்த படத்தில் ஏழு சண்டைக்காட்சிகள் இருப்பதாகவும், இதில் ஒரு சண்டைக்காட்சி இரண்டு விஜய்களும் ஆக்ரோஷமாக மோதுவது போன்றும் கிராபிக்ஸில் எடுக்கப்பட்டு வருவதாகவும் படக்குழுவினர் கூறுகின்றனர்.
இந்த கிராபிக்ஸ் சண்டைக்காட்சிகளை வெளிநாட்டு தொழில்நுட்ப கலைஞர்களிடம் ஆலோசனை பெற்று எடுக்கப்பட்டு வருவதாகவும், ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இந்த சண்டைக்காட்சி இருக்கும் என்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
விஜய், சமந்தா நடிக்கும் ‘கத்தி’ வரும் தீபாவளி அன்று திரைக்கும் வரும் என்றும், அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெறுவதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர்.