நெற்றியில் ஏற்படும் ஒரு விதமான பயங்கர‌ வலி

forehead-fingertips-pain-sensetive

நெற்றி வலி! இதைக் கேட்பதற்கு சற்று வியப்பாகத் தான் இருக்கும். ஆனால், மொத்த மக்கள் தொகையில் ஏறக்குறைய 5 விழுக்காடு மக்கள் இந்த வலியினால் துன்பப்படுகிறார்கள். இத்தகைய வலியைப்பற்றி, அதற்கான தீர்வுகள், சிகிச்சைகள் பற்றி மருத்துவர்கள் சொல்லும் போது, “முகம் மற்றும் நெற்றிப்பகுதியில் ஏற்படுகிற இந்த வலியினால் நடுத்தர வயதினரும் முதியோரும் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இந்த வலிக்கு ‘ட்ரை ஜெமினல் நியூரால்ஜியா’ என்று பெயர். ஒரு பக்கமாக வலி ஏற்படும். பொதுவாக வலது பக்கத்தில் வலியை உணர்வார்கள். தாடை, கன்னங் களிலும் வலி இருக்கும். மின்சாரம் தாக்கியது போல வலிக்கும்.

அது சில நொடிகளோ அல்லது சில நிமிடங்களோ நீடிக்கும். ஆனால், விட்டுவிட்டு வரும் . முகத்தைத் தொட்டாலோ, காற்று பட்டாலோ, வாயை அசைத்தாலோ கூட வலி அதிகமாகும். இந்த வலிக்கான சரியான காரணம் இது வரை கண்டு பிடிக்கப்படவில்லை. சில வருடங்களுக்கு முன்பு வரை இந்த வலிக்கு மாத்திரைகள் மட்டும் தான் தீர்வாக இருந்தது. நாள்பட நாள்பட நோயாளிகள் எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளின் அளவு அதிகரித்துக் கொண்டே போகும். அதன் பக்கவிளைவுகளையும் தவிர்க்க முடியாது. நோயாளிகளும் சரியான வலி நிவாரணம் இல்லாமல் அவதிப் பட்டுக் கொண்டிருந்தார்கள். நோயாளிகளின் தொடு உணர்ச்சியும் பாதிக்கப்பட்டது.

இன்றைய நவீன மருத்துவத்தில் ரேடியோ வேவ் எனப்படும் கதிரியக்க அலை சிகிச்சை முறையில், வலி ஏற்படும் நரம்புகளில் செலுத்தி, வலியை நீக்க முடியும். நோயாளிகளுக்குத் தொடு உணர்ச்சி பாதிக்கப்படாமல் வலி மட்டும் நீங்கும். இந்த நவீன மருத்துவ முறையில், குறைந்த பட்சம் 9 முதல் 18 மாதங்கள் வரை நிவாரணம் நீடிக்கும். தவிர நரம்புமுடிச்சுகளில் இந்த கதிரியக்க அலையைச் செலுத்தி, கன்னங்கள், தாடைகள், நெற்றி முழுவதும் 6 முதல் 18 மாதங்கள் வரை வலி இல்லாமல் இருக்கச் செய்யலாம். இந்த சிகிச்சையை எடுத்துக் கொள்வதன் மூலம் நோயாளிகள், மாத்திரைகளின் அளவைக் குறைக்கவோ, முற்றிலும் நிறுத்தவோ கூட வாய்ப்புகள் அதிகம்.” இந்நெற்றிவலி ஏற்படுவதற்கு என்ன காரணம் என்ற ஆய்வு தொடர்கிறது. இதனடிப்படையைத் தெரிந்த கொண்டு விட்டால், இந்த வலி வராமல் தடுக்கவும், வந்தால் முற்றிலும் குணப்படுத்தவும் மருந்துகள் கண்டுபிடிக்க உதவியாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகி றார்கள்.

Leave a Reply