50 வயதுக்கு மேல் பெண்களுக்கு செக்ஸ் அவசியமா? போர்ச்சுக்கல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

50 வயதுக்கு மேல் பெண்களுக்கு செக்ஸ் அவசியமா? போர்ச்சுக்கல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பொதுவாக பெண்களுக்கு 50 வயதுக்கு மேல் செக்ஸில் விருப்பம் இருக்காது என்று கூறப்பட்டு வரும் நிலையில் பெண்கள் ‘செக்ஸ்’சில் ஈடுபட வயது வரம்பு இல்லை என்றும் 50 வயதுக்கு பிறகு பெண்கள் ‘செக்ஸ்’சில் ஈடுபடுவது அவசியம் என ஐரோப்பிய நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.

போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த 72வயது மரியா ஜிவோன் கார்வல்கோ மொராய்ஸ் என்பவருக்கு கடந்த 1995ஆம் ஆண்டு 50-வது வயதில் அவரது பிறப்புறுப்பில் சர்ஜரி நடந்தது.

அப்போது நடந்த தவறான சிகிச்சையால் அவரது உடல் நலத்தில் பாதிப்பு ஏற்பட்டது. அதனால் அவரால் ‘செக்ஸ்’சில் ஈடுபட முடியவில்லை. அதை தொடர்ந்து அவர் தனக்கு நடந்த தவறான ஆபரேசன் குறித்து போர்ச்சுக்கல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

எனவே 2013-ம் ஆண்டில் தனக்கு ஆபரேசன் செய்த மருத்துவமனை மீது நஷ்டஈடு கேட்டு மொராயிஸ் போர்ச்சுகல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு ஆஸ்பத்திரி ரூ.90 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டது.

ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து மருத்துவமனை தரப்பில் போர்ச்சுக்கல் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. அதை விசாரித்த கோர்ட்டு நஷ்டஈடு தொகையை மூன்றில் ஒரு பங்கை குறைத்துவிட்டது.

மேலும் பாதிக்கப்பட்ட மொராயிஸ் தற்போது 2 இளைஞர்களுக்கு தாயாக இருப்பதாகவும், பொதுவாக 50 வயதுக்கு பிறகு பெண்களுக்கு ‘செக்ஸ்’ தேவையில்லை என்றும் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து பிரான்சில் உள்ள ஐரோப்பிய யூனியனின் மனித உரிமைகள் கோர்ட்டில் மொராயிஸ் மேல் முறையீடு (அப்பீல்) செய்தார். அதை விசாரித்த கோர்ட்டு பெண்கள் ‘செக்ஸ்’சில் ஈடுபட வயது வரம்பு இல்லை என்றும், 50 வயதுக்கு பிறகு பெண்கள் ‘செக்ஸ்’சில் ஈடுபடுவது அவசியம் என தீர்ப்பு கூறியது.

Leave a Reply