விபச்சாரத்திற்காக அமெரிக்காவுக்கு கடத்தப்படும் வறுமையில் சிக்கிய பெண்கள்
சீனா மற்றும் தென்கொரியா நாடுகளில் இருந்து இளம் மற்றும் நடுத்தர வயது பெண்களை தேடிப் பிடிக்கும் தரகர்கள் அவர்களில் வறுமை நிலை மற்றும் கடன்சுமையால் சிக்கி தவிப்பவர்களை கவுரவமான வேலை வாங்கி தருவதாக அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
சரியாக ஆங்கிலம் பேச தெரியாத இவர்கள் அமெரிக்காவில் உள்ள விபசார புரோக்கர்கள் மூலமாக நியூயார்க் மற்றும் கலிபோர்னியா மாநில எல்லை வழியாக அமெரிக்கா வந்து சேருகிறார்கள்.
நாட்டின் முக்கிய நெடுஞ்சாலை பகுதிகளில் இயங்கும் சுமார் 9 ஆயிரம் சாலையோர மசாஜ் பார்லர்கள், நிர்வாண நடன விடுதிகளில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் இந்தப் பெண்கள் கடும் சித்ரவதைக்கும், மிரட்டல்களுக்கும் உள்ளாகி அவ்வப்போது சுழற்சி முறையில் இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.
சர்வதேச அளவில் ஆள்கடத்தல் மூலம் 1500 கோடி அமெரிக்க டாலர்களும், விபசாரத்துக்காக பெண்களை கடத்துவதால் அமெரிக்காவில் மட்டும் சுமார் 250 கோடி டாலர் அளவுக்கு பணப்புழக்கம் நடமாட்டத்தில் உள்ளதாகவும் இந்த ஆய்வு குறிப்பிடுகின்றது.
பிரபல செய்தி நிறுவனமான தாம்சன் ரியூட்டர்ஸ் நிறுவனத்தின் தொண்டு அமைப்பான தாம்சன் ரியூட்டர்ஸ் பவுண்டேஷன் சார்பில் இயங்கும் பெண்ணுரிமை அமைப்பின் சார்பில் பெண்ணடிமைத்தனத்துக்கு எதிரான போலாரிஸ் என்ற ஆய்வு நிறுவனம் பாதிக்கப்பட்ட சுமார் 3 ஆயிரம் பெண்களிடம் நடத்திய நேர்காணலில் மேற்கண்ட விபரங்கள் தெரியவந்துள்ளது. #tamilnews