பெண் போலீசிடம் ஆபாச பேச்சு – வாலிபர் கைது

காவல் துறையில் இயங்கும் கட்டுப்பாட்டு அறை தான் முக்கிய தொலை தொடர்பாகும். இதில் பெண் போலீசார் தான் அதிகம் பணியில் இருப்பார்கள். இதனை சாதகமாக பயன்படுத்திய வாலிபர் ஒருவர். இரவு 9 மணிக்கு மேல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து பெண் போலீசாரிடம் ஆபாச வார்தைகள் பேச ஆரம்பிப்பார். இப்படி தொடர்ச்சியாக ஆயிரம் முறைக்கு மேல் கால் செய்து போலீசாரிடம் ஆபாசமாக பேசியுள்ளார். இவரை பற்றி தகவல்களை சேகரித்த கட்டுப்பாட்டு அறை போலீசார் எழும்பூர் போலீசில் புகார் செய்தனர். இறுதியில் போன் செய்த மர்ம ஆசாமி பன்னீர் செல்வம் 32 கைது செய்யப்பட்டார்.

Leave a Reply