ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஃபத்வா கொடுத்த இஸ்லாமிய அமைப்புக்கு பிரபல நடிகை கேள்வி

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஃபத்வா கொடுத்த இஸ்லாமிய அமைப்புக்கு பிரபல நடிகை கேள்வி
shabana
சமீபத்தில் அரபு நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளிலும் வெளியான “முஹம்மத்: மெஸென்ஜர் ஆஃப் காட்” என்ற படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். ஆனால் இந்த படம் இஸ்லாமிய மதத்திற்கு எதிரானது என்று கூறி மும்பையை சேர்ந்த இஸ்லாமிய அமைப்பு ஒன்று ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், இந்த படத்தின் இயக்குனர் மஜீத் மஜிதிக்கும் ஃபத்வா கொடுத்தது. இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் விளக்கம் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் பழம்பெரும் பாலிவுட் நடிகையும், ஐந்து முறை தேசிய விருது பெற்றவருமான ஷபானா ஆஷ்மி, ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கொடுத்திருந்த ஃபத்வாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “ஃபத்வா கொடுத்த இஸ்லாமிய அமைப்பு சரியான அங்கீகாரம் பெற்ற அமைப்பா? என்றும் அவர்கள் எந்த அடிப்படையில் ஃபத்வா கொடுத்தார்கள்? என்றும் ஃபத்வா கொடுக்கும் முன் அவர்கள் இந்த படத்தை பார்த்தார்களா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரு படத்தைப் பார்க்காமல் அந்த படம் இப்படித்தான் இருக்கும் என எந்த நம்பிக்கையில் ஃபத்வா கொடுத்தார்கள்? மேலும் ஃபத்வா என்பது விதிக்கப்படுவது அல்ல அது முழுமையான வேண்டுகோள் மட்டுமே. இவர்கள் அதையே தவறாகக் கொடுத்துள்ளார்கள். மேலும் தீர விசாரிக்காமல் யாரும் யாருக்கும் ஃபத்வா கொடுக்க முடியாது என்றும்  ஃபத்வா கொடுப்பதற்கு என தனி முறைகள் உள்ளது” என்று கூறியுள்ளார்.

Leave a Reply