நவாஸ் தம்பிக்கு கல்தா! புதிய அதிபர் ஆகிறார் ஷாஹித் ககான் அப்பாஸி
பாகிஸ்தான் நாட்டின் இடைக்கால பிரதமராக அந்த நாட்டின் பெட்ரோலியத்துறை அமைச்சர் ஷாஹித் ககான் அப்பாஸி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை பாகிஸ்தான் முஸ்லிம் லீக் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.
பனாமா ஊழல் வழக்கில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் நேற்று தனது பதவியை இழந்தார். இதையடுத்து அடுத்து அவரது சகோதரர் ஷபாஸ் ஷெரீப் அல்லது நவாசின் மனைவி பிரதமராக பதவி ஏற்கலாம் என்று கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில், அந்த நாட்டின் இடைக்கால பிரதமராக பெட்ரோலியத்துறை அமைச்சர் ஷாஹித் ககான் அப்பாஸியை நவாசின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் தேர்வு செய்துள்ளது. இவர் இடைக்கால பிரதமராக இருந்தாலும், நவாசுக்கு அடுத்த பிரதமராக அவரது சகோதரர் ஷபாஸ் இருப்பார் என்று பாகிஸ்தான் முஸ்லிம் லீம் முடிவு செய்துள்ளது.