அஜீத்துக்கு எதிராக அதிரடி முடிவு எடுத்த ஷாலினி-ஷாம்லி.

அஜீத்துக்கு எதிராக அதிரடி முடிவு எடுத்த ஷாலினி-ஷாம்லி.
ajith
அஜீத்தின் மச்சினி ஷாம்லி இரண்டு தமிழ் படங்களிலும் ஒரு மலையாள படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விக்ரம் பிரபு நடிக்கும் ‘வீரசிவாஜி’ படத்திலும், தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ள படத்திலும் அவர் ஓப்பந்தமாகியுள்ளார். மேலும் ஷாமிலிக்கு அஜீத்தே போட்டோஷூட் எடுத்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் ஷாம்லி நடிக்க வருவதில் அஜீத்துக்கு விருப்பமில்லை என்ற செய்தி தற்போது வெளிவந்துள்ளது. ஷாம்லி டெக்னீஷ்யன் அல்லது இயக்குனர் துறையை தேர்வு செய்ய அஜீத் அறிவுரை கூறியதாகவும், ஆனால் சிறுவயதில் இருந்தே நடித்தே பழக்கம் கொண்ட ஷாம்லி, அஜீத்தின் விருப்பத்திற்கு எதிராக நடிகையாகவே தொடர முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விஷயத்தில் அஜீத் மனைவி ஷாலினியும் அஜீத்துக்கு எதிராகவும், ஷாமிலிக்கு ஆதரவாகவும் முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.

மூன்று வயதாக இருக்கும்போதே மணிரத்னம் இயக்கிய ‘அஞ்சலி’ படத்தில் நடித்து தேசியவிருதும் பெற்ற ஷாம்லி, நடிப்பு தவிர வேறு எந்த துறையிலும் விருப்பம் இல்லை என்பதை புரிந்து கொண்ட ஷாலினி, தனது தங்கையின் விருப்பத்தை நிறைவேற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply