அஜீத் தற்போது ‘தல 56’ படத்திற்காக வித்தியாசமான தோற்றத்தில் இருப்பதாகவும், இந்த தோற்றத்தை வெளியே காண்பிக்க விரும்பாததால், அவர் தற்போது வெளியே வருவதை குறைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அஜீத் காரில் சென்றபோது அவரை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்தபோதும், அவர் காரில் இருந்து இந்த காரணத்தால்தான் இறங்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் அவரது புதிய தோற்றத்தை பார்க்கும் பலரும் அவர் ஹாலிவுட் நடிகர் போன்றே இருப்பதாக கூற அவர்களிடம் மெல்லிய புன்னகையை மட்டுமே பதிலாக கூறிவிட்டு அஜீத் சென்றுவிடுவாராம். தனக்கு நெருக்கமானவர்களிடம் மட்டும் எல்லோரும் என்னை ஹாலிவுட் நடிகர் போன்று இருப்பதாக சொல்லி ஹாலிவுட்டுக்கே அனுப்பிவிடுவார்களோ என்று ஷாலினி பயப்படுவதாக சிரித்து கொண்டே கூறியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் ‘தல 56’ படத்தில் அஜீத்தை ஒரு குத்தாட்ட பாடலுக்கு ஷோபி மாஸ்டர் ஆடவைத்துள்ளாராம். இந்த பாட்டிற்கு வித்தியாசமான பாணியில் அஜீத்தின் உடலமைப்புக்கு ஏற்றவாறு குத்தாட்ட பாணியையே ஷோபி மாஸ்டர் மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.