ஜப்பானில் பயங்கர பூகம்பம்: சுனாமி வருமா?
ஜப்பான் நாட்டில் சுமார் 5.8 ரிக்டர் அளவிற்கு பயங்கர பூகம்பம் ஏற்பட்டுள்ளதால் சுனாமி ஏற்படுமா? என்ற அச்சம் அந்நாட்டு மக்களிடையே நிலவி வருகிறது.
பொருளாதாரத்தில் முன்னேறிய ஜப்பான் நாட்டை அடிக்கடி பூகம்பம், சுனாமி ஆகியவை பயமுறுத்தி வரும் நிலையில் ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகில் உள்ள ஹோஸ்னு என்ற பகுதியில் உள்ள ஷிமானே பகுதியில் இன்று அதிகாலை திடீரென பூகம்பம் ஏற்பட்டது.
இந்த பூகம்பம் சுமார் 5.8 ரிக்டர் அளவுகோலில் பதிவானது. சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூகம்பத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை. மேலும் பூகம்பம் காரணமாக சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.