ஷேர்ன் வார்னே இடத்தை பிடித்தார் ஷேர்ன் வாட்சன்.

watson copy

7வது ஐ.பி.எல் போட்டிகள் வரும் ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாதத்தில் தொடங்க உள்ளது. இந்நிலையில் அனைத்து அணிகளும் ஐ.பி.எல் போட்டிகளுக்கு தயாராகி வருகிறது.

நடிகை ஷில்பா ஷெட்டியின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ராகுல் டிராவிட் அனைத்து வகை போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக சமீபத்தில் அறிவித்துவிட்டதால், ராஜஸ்தான் அணியின் கேப்டன் பதவியை யாருக்கு கொடுக்கலாம் என்ற ஆலோசனை நேற்று ஷில்பா ஷெட்டி தலைமையில் நடைபெற்றது.

இதில் ஒருமித்த முடிவாக ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சனை கேப்டனாக நியமிக்க முடிவு செய்யப்பட்டது. ஏற்கனவே ராஜஸ்தான் அணிக்கு ஆஸ்திரேலிய வீரர் ஷேர்ன் வார்னே கேப்டனாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

32 வயதாகும் ஷேன் வாட்சன் ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் அதிரடியாக விளையாடக்கூடியவர். கடந்த 2008ஆம் ஆண்டில் ஐ.பி.எல் சாம்பியன் ஆனதுபோல் மீண்டும் ராஜஸ்தான் அணி சாம்பியன் ஆகும் என வாட்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். புதிய கேப்டன் வாட்சனுக்கு ராகுல் டிராவிட் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply