‘ஐ’ படத்தின் ரிலீஸ் தேதியை திடீரென மாற்றிய ஷங்கர். கோலிவுட்டில் பெரும் பரபரப்பு.

shankar vs ajithநேற்று வரை சுமூகமாக போய்கொண்டிருந்த ‘ஐ’ மற்றும் என்னை அறிந்தால் படங்களின் ரிலீஸ் தேதி ஒப்பந்தங்கள் இன்று திடீரென மீறப்பட்டு இரு படங்களும் நேருக்கு நேர் மோதிக்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஷங்கர் இயக்கிய ‘ஐ’ மற்றும் அஜீத் நடித்துள்ள என்னை அறிந்தால் ஆகிய இரு பெரிய படங்களும் ஒன்றுக்கொன்று நேருக்கு நேர் மோதாத வகையில் ‘ஐ’ படத்தை ஜனவரி 9ஆம் தேதியும், ‘என்னை அறிந்தால்’ படத்தை ஜனவரி 15ஆம் தேதி ரிலீஸ் செய்ய இரு படங்களின் தயாரிப்பாளர்களும் முடிவு செய்திருந்தனர். ஆனால் இன்று திடீரென ஷங்கரின் ‘ஐ’ ஜனவரி 14ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தன்னுடைய படம் ரிலீஸாவதற்கு முன் ஆறு நாட்களில் அதிக வசூலை தனியாக எடுத்துவிட ‘ஐ’ படத்திற்கு கொடுத்த காலக்கெடுவை ஷங்கர் நிராகரித்துவிட்டதாக கூறப்படுகிறது. பொங்கல் தினத்தில் என்னை அறிந்தால், ஆம்பள, கொம்பன் ஆகிய மூன்று புதிய படங்கள் ரிலீஸாகும்போது, ‘ஐ’ படத்தை பழைய படம் என நினைக்க வாய்ப்பு இருப்பதாக கருதிய ஷங்கர் திடீரென படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றிவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ‘ஐ’ ஜனவரி 14ஆம் தேதியும், என்னை அறிந்தால், கொம்பன், ஆம்பள ஆகிய மூன்று படங்களூம் ஜனவரி 15ஆம் தேதியும் ரிலீஸாகவுள்ளது.

Leave a Reply