பல கோடி செலவில் பிரமாண்டமாக தயாரான ஷங்கரின் இயக்கத்தில் கடந்த இரண்டு வருடங்களாக உருவாகிய திரைப்படமான ‘ஐ’ படத்தின் ரிலீஸை தமிழகம் மட்டுமின்றி உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில் இன்று சென்னை ஐகோர்ட் திடீரென ‘ஐ’ படத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் ‘ஐ’ படக்குழுவினர் உள்பட அனைஅரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த படத்திற்காக தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் ‘பிக்சர் ஹவுஸ் மிடியா என்ற நிறுவனத்திடம் வாங்கிய கடனை குறிப்பிட்ட காலத்திற்குள் திருப்பி தராததால் அந்நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் ‘ஐ’ படத்தை தடை செய்ய கோரி மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் ‘ஐ’ படத்திற்கு இடைக்கால தடை விதித்துள்ளது.