ரஜினி படத்தை மிஸ் செய்துவிட்டேன்: ஷங்கர்

ரஜினி படத்தை மிஸ் செய்துவிட்டேன்: ஷங்கர்
சமூக போராளி டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் ஆடியோ விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த  விழாவில் இயக்குனர் ஷங்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது: 
டிராபிக் ராமசாமி என்னையும் பாதித்த ஒரு மனிதர். அவருக்குள் ஒரு ஹீரோயிசம் இருக்கும். அதைப் பார்த்து நான் மனசுக்குள் கை தட்டியதுண்டு. இவர் கதையைப் படமாக்க நானும் ஆசைப்பட்டேன். இவர் கத்தி எடுக்காத இந்தியன். வயசான அந்நியன் அம்பி. இவர் கதையில் ரஜினி சாரை வைத்து எடுக்கக் கூட நினைத்தேன்.
எஸ்.ஏ.சி. சார் நடிக்கிறார் என்று அறிவிப்பு வந்ததும் வட போச்சே என்ற ஏமாற்றம். இருந்தாலும் மகிழ்ச்சி. இந்தப் படத்தைப் பார்க்க நான் காத்திருக்கிறேன்.” என்று கூறினார்.

Leave a Reply