என்னை கருணைக்கொலை செய்துவிடுங்கள்: ஒரு திருநங்கையின் கண்ணீர் கடிதம்

என்னை கருணைக்கொலை செய்துவிடுங்கள்: ஒரு திருநங்கையின் கண்ணீர் கடிதம்

ஆணுக்கும் பெண்ணுக்கும் கிடைக்கும் அடிப்படை உரிமைகள் கூட எங்களுக்கு கிடைக்காத காரணத்தால் இந்திய அரசே என்னை கருணைக்கொலை செய்துவிடுங்கள் என்ரு திருநங்கை ஒருவர் எழுதிய கடிதம் அனைவரையும் திடுக்கிட வைத்துள்ளது.

தமிழகத்தை சேர்ந்த தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஷானவி பொன்னுச்சாமி என்ற திருநங்கை கடந்த 2010ஆம் ஆண்டு பல்வேறு போராட்டங்களுக்கு பின்னர் தனது எஞ்சினியரிங் படிப்பை முடித்தார். சக மாணவர்கள் மற்றும் உறவினர்களின் கேலி, கிண்டலை பொருட்படுத்தாமல் கல்வி ஒன்றே நம்மை காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் பொறியியல் பட்டதாரி ஆன ஷானவி, ஏர் இந்தியாவில் வாடிக்கையாளர்களுக்கு உதவும் அதிகாரியாக பணியாற்றி வந்தார். பின்னர் அறுவை சிகிச்சை செய்து பெண்ணாக மாறி தன்னுடைய பெயரையும் மாற்றிக்கொண்ட ஷானவிக்கு பெற்றோர்களிடம் இருந்து பலத்த எதிர்ப்பு கிடைத்துள்ளது

இருப்பினும் தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து வந்த ஷானவி மீண்டும் ஏர் இந்தியாவில் இருந்து நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்பட்டார். ஆனால் அவருடைய பெயர் தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியலில் இல்லை. ஒருமுறை இருமுறை அல்ல, நான்குமுறை நேர்முகத்தேர்வில் அவர் கலந்து கொண்டும், தன்னை ஏர் இந்தியா நிராகரிப்பதை உணர்ந்த ஷானவி ஏமாற்றத்தின் உச்சத்திற்கே சென்றார். இந்த நிலையில் ஏர் இந்தியாவில் ஆண்கள், பெண்களுக்கு மட்டுமே வேலை என்ற பதில் இறுதியில் ஷானவிக்கு அளித்துள்ளது. இதுகுறித்து ஷானவி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரந்தார். சுப்ரீம் கோர்ட் இதுகுறித்து 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னும் ஏர் இந்தியா பதிலளிக்கவில்லை.

இந்நிலையில் தனக்கு வேலை வேண்டாம் என்றும், தகுதியிருந்தும் தனக்கு வேலை கிடைக்காததால் தன்னை கருணைக் கொலை செய்யுமாறும் குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார். இந்த கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply