15 வருடமாக சசிகலாவிடம் சித்திரவதையை அனுபவித்தேன். ஓபிஎஸ் ஆவேசம்

15 வருடமாக சசிகலாவிடம் சித்திரவதையை அனுபவித்தேன். ஓபிஎஸ் ஆவேசம்

தமிழக அரசியல் களத்தில் அடுத்து ஆட்சி அமைப்பது யார்? என்ற கேள்விக்கு இன்னும் விடை தெரியாத நிலையில் ஒருபக்கம் முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவு அதிகரித்து கொண்டே வருகிறது. இன்னொரு பக்கம் சசிகலா தனக்கு ஆதரவு தருபவர்களை தக்க வைத்து கொள்ள போராடி வருகிறார். இந்நிலையில் முடிவு எடுக்க வேண்டிய தமிழக பொறுப்பு கவர்னர் இன்னும் தனது முடிவை அறிவிக்கவில்லை

இந்நிலையில் முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். எப்போதும் பொறுமையுடன் அமைதியாக பேசும் ஓபிஎஸ் அவர்கள் நேற்று ஆவேசமாக சசிகலா மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறினார். அவர் கூறியதாவது:

ஜெயலலிதா முதல்வராக வேண்டும் என்றுதான் மக்கள் வாக்களித்தனர்சசிகலா முதல்வராவதை எம்.எல்.ஏக்கள் விரும்பவில்லை2 நாட்களாக ஏன் கூவத்தூர் சென்று வருகிறார் சசிகலா. ஏன்?கூவத்தூரில் உள்ள எம்.எல்.ஏக்கள் என்னுடன் பேசிக் கொண்டுள்ளனர்.

ஒவ்வொரு எம்.எல்.ஏவுக்கும் 4 பேரை காவலுக்கு நிறுத்தியுள்ளனர்அம்மா ஏற்படுத்திய ஆட்சியைக் காப்பாற்ற வேண்டிய எண்ணம் மட்டுமே என்னிடம் உள்ளது.பொதுச் செயலாளராக மதுசூதனைத்தான் தேர்வு செய்வோம் என்று சொன்னார்கள்.

இப்போது செய்தியாளர்களைச் சந்திக்கும் சசிகலா, அம்மா மருத்துவமனையில் இருந்தபோது சந்திக்காதது ஏன்? .எங்கள் யாரையும் அம்மாவைப் பார்க்க அனுமதிக்கவில்லை சசிகலா சொந்தமான தீபாவையும் அனுமதிக்கவில்லை. ஜெயலலிதா இதுவரை என்னை கடுஞ்சொல் கொண்டு பேசியதில்லை. ஜெயலலிதா என்னை கடுமையாக பேசாததே இவர்களுக்குக் கோபம். 15 வருடமாக சசிகலாவிடம் சித்திரவதையை அனுபவித்தேன்.இப்போது முதலைக் கண்ணீர் வடித்து ஆட்சியைப் பிடிக்கப் பார்க்கிறார்”

இவ்வாறு முதல்வர் ஓபிஎஸ்  தெரிவித்தார்.

Leave a Reply