ஷீலா பாலகிருஷ்ணன் திடீர் ராஜினாமா? யார் காரணம்?
தமிழக அரசின் ஆலோசகர் பொறுப்பில் பணிபுரிந்து வந்த இருந்து ஷீலா பாலகிருஷ்ணன் நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வரும் மார்ச் 31-ம் தேதி வரை பதவிகாலம் உள்ள நிலையில் அவர் திடீரென பதவி விலகியிருப்பது குறித்த காரணங்கள் எதுவும் தெரியவில்லை
முன்னாள் தமிழக தலைமைச் செயலாளரான ஷீலா பாலகிருஷ்ணன் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி தமிழக அரசின் ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டார். அவர் தனது அனுபவத்தின் மூலம் தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கு துணணயிருப்பார் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவருக்கு இந்த பொறுப்பை வழங்கினார்.
மேலும் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது தமிழக அரசின் முக்கிய அலுவல்களை இவரே கவனித்து வந்ததாக கூறப்பட்டது. மேலும் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னரும் முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு அவர் முக்கிய ஆலோசனை வழங்கிவந்த நிலையில் அவர் தீடீரென பதவி விலகியிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. அதிமுக தலைமையின் நெருக்குதல் காரணமாகவே இவர் பதவி விலகியிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.