கின்னஸ் சாதனை புரிந்த ஆஸ்திரேலியா ஆடு
[carousel ids=”72858,72859,72860,72861,72862,72863″]
ஆடுகளின் உரோமங்களில் இருந்து கம்பளி தயாரிக்கும் தொழில் உலகம் முழுவதும் நடந்து வருகிறது. சராசரியாக ஒரு ஆட்டில் இருந்து ஐந்து முதல் பத்து கிலோ உரோமங்கள் எடுக்கப்பட்டு அதில் இருந்து கம்பளி தயாரித்து வரும் நிலையில் ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு ஆடு 41.1 கிலோ உரோமங்கள் கொடுத்துள்ளதாகவும், இதற்காக இந்த ஆடு கின்னஸ் புத்தக்கத்தில் இடம்பெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில் உள்ள கிரிஸ் என்பவர் தனது ஆட்டுப்பண்ணையில் வளர்ந்து வரும் ஒரு ஆடு மிக அதிக உரோமங்களுடன் இருந்தது. எனவே கின்னஸ் அதிகாரிகள் முன்பு அந்த ஆட்டின் உரோமங்கள் நீக்கப்பட்டன. இந்த ஒரு ஆட்டின் மூலம் மட்டுமே 41.1 கிலோ உரோமங்கள் கிடைத்துள்ளதாகவும் இது ஒரு புதிய சாதனை என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து கிரிஸ் செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘நான் ஆடு வளர்ப்பில் கடந்த 35 வருடங்களாக ஈடுபட்டு வருகிறேன். இந்த அளவுக்கு ஒரே ஆட்டின் மூலம் அதிக உரோமங்கள் இருந்ததை நான் இதற்கு முன்னர் பார்த்ததில்லை. இந்த ஆடு உண்மையிலேயே ஒரு வித்தியாசமான ஆடுதான் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.