ஐக்கிய அரபு எமிரேட் பிரதமரின் 33 வயது மகன் திடீர் மரணம்.
ஐக்கிய அரபு எமிரேட் நாட்டின் துணை அதிபரும், பிரதமரும், துபாய் மன்னருமான ஷேக் முஹம்மது பின் ரஷித் அல் மக்தூம் அவர்களின் மகன் ஷேக் ரஷித் பின் முஹம்மது பின் ரஷித் அல் மக்தூம் என்பவர் இன்று மாரடைப்பால் திடீரென மரணம் அடைந்தார். அவருக்கு வயது 33
இவரது மரணத்தை அடுத்து துபாய் நாட்டில் மூன்று நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள அரசு அலுவலகங்களில் ஷேக் ரஷித் பின் முஹம்மது பின் ரஷித் அல் மக்தூம் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
துபாயில் உள்ள ஸபீல் மசூதியில் இன்று மாலை நடைபெறும் ‘ஜனாஸா’ தொழுகைக்கு பின்னர் ஷேக் ரஷித் பின் முஹம்மது பின் ரஷித் அல் மக்தூமின் உடல் புர் துபாயில் உள்ள உம்ம் ஹரிர் கப்ருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும் என துபாய் அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.