முன்னாள் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு ரூ.3 லட்சம் அபராதம். டெல்லி நீதிமன்றம் அதிரடி.

shielaகடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டசபை தேர்தலின்போது, தன் மீது ஆதாரபூர்வமற்ற ஊழல் குற்றச்சாட்டுகள் கூறியதாக பாரதிய ஜனதாவின் முக்கிய தலைவர் விஜேந்தர் குப்தா மீது அப்போதைய முதல்வர் ஷீலா தீட்சித் அவதூறு வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். ஆனால் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஒருமுறை கூட அவர் ஆஜராகவில்லை. அதனால் கடும் கோபமடைந்த டெல்லி நீதிமன்றம் ஷீலா தீட்சித்துக்கு நேற்று ரூ.3 லட்சம் அபராதம் விதித்தது.

இதே வழக்கிற்காக ஏற்கனவே டெல்லி நீதிமன்றம் அவருக்கு ரூ.50ஆயிரம் அபராதத்தை கடந்த மாதம் விதித்தது. இதன்பின்னரும் அவர் வழக்கு விசாரணையின்போது ஆஜராகாததால் ரூ.3லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாக நீதிமன்ற வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் இனிவரும் காலங்களிலும் விசாரணைக்கு ஆஜராகவில்லை எனில் வழக்கு தள்ளுபடி செய்யப்படும் என்றும் நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் தான் கேரள கவர்னர் பதவியை ஏற்றதால்தான் விசாரணைக்கு ஆஜராகவில்லை என அவரது தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply