செல்பி எடுப்பதன் மோகம் நாம் அனைவருக்கும் தெரியும். சிட்டியில் இருந்து பட்டி தொட்டி வரை செல்பி மோகம் அதிகரித்து வருகின்றது. மக்களிடையே இருக்கின்ற இந்த மோகத்தை வைத்து பல செல்போன் நிறுவனங்கள் செல்பிகாகவே செல்போன்களை தயாரிக்கின்றனர். மேலும் செல்பிக்காகவே பல அப்ளிகேசன் உருவாக்கிவருகின்ற நிலையில் தற்போது எளிதாக செல்பி எடுக்க ஒரு புதிய அப்ளிகேசன் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
‘ட்ரிகர்டிராப் செல்பி’ (Triggertrap) என்ற புதிய அப்ளிகேசன், ஒலி மூலமாக செல்போன் கேமராவை இயக்குகிறது. இது தற்போது ஐஓஎஸ் ஸ்டோரில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.