15 ஆண்டுகள் டெல்லியில் முதல் அமைச்சராக இருந்த காங்கிரஸ் கட்சியின் ஷீலா தீட்சித் கடந்த டிசம்பரில் நடந்த சட்டசபை தேர்தல் அரவிந்த் கெஜ்ரிவாலால் தோற்கடிக்கப்பட்டார். பதவி இழந்த ஷீலா தீட்சித் இன்று கேரள ஆளுனராக நியமனம் செய்யப்பட்டார்.
கேரள ஆளுனராக இருந்த நிகில்குமார், வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக ஷீலா தீட்சித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஷீலா தீட்சித் கேரளாவின் 22வது கவர்னர் ஆவார். இவர் இன்னும் இரண்டு நாட்களில் பதவியேற்றுக்கொள்வார் என தெரிகிறது.