ஜெயலலிதா விடுதலை வேண்டி சிதம்பரம் கோவிலில் வழிபாடு செய்த ஷீலாபிரியா.

sheila priyaசொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விடுதலையாக வேண்டி, முதல்வரின் செயலாளர் எம்.ஷீலாபிரியா சிதம்பரம் நடராஜர் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் நேற்று தனது மகள் மற்றும் உறவினர்களுடன் சென்று சிறப்பு பிரார்த்தனை செய்தார்.

முதல்வரின் செயலாளர் எம்.ஷீலாபிரியா நடராஜர் கோயிலுக்கு சென்று சிற்றம்பல மேடையில் ஏறி சித்சபையில் உள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தி பயபக்தியுடன் வழிபட்டார்.

சிதம்பரம் நடராஜர் கோயில் பொதுதீட்சிதர்கள் ஷீலாபிரியா சார்பில் 1008 சகஸரநாம அர்ச்சனை மற்றும் சிறப்பு அர்ச்சனை, தீபாராதனை செய்தனர். அவர்களுக்கு  பிரசாதத்தை வழங்கி அவர் நினைத்தது நடக்கும் என அருள்வாக்கு அளித்தனர்.

பின்னர் அவர் நடராஜர் கோயிலுள் உள்ள ஸ்ரீதில்லைகோவிந்தராஜப் பெருமான், தாயார் சந்நிதி, ஆதிமூலநாதர் சந்நிதி உள்ளிட்ட அனைத்து சந்திதிகளுக்கும் சென்று ஷீலாபிரியா சுவாமி தரிசனம் செய்தார்.

ஷீபாப்ரியாவின் வழிபாட்டு ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் க.முருகன் செய்தார். தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா விடுதலையாக வேண்டி, இந்த பிராத்தனை மற்றும் வழிபாட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது

Leave a Reply