ரஷ்ய பிரதமரின் குரில் தீவு சுற்றுப்பயணத்திற்கு ஜப்பான் பிரதமர் கண்டனம்

ரஷ்ய பிரதமரின் குரில் தீவு சுற்றுப்பயணத்திற்கு ஜப்பான் பிரதமர் கண்டனம்

russian pmவடக்கு பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள குரில் தீவு தற்போது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் இந்த தீவுக்கு ஜப்பான் நாடும் சொந்தம் கொண்டாடி வருகிறது. கடந்த 70 வருடங்களாக இந்த பிரச்சனை இருந்து வரும் நிலையில் சமீபத்தில் ரஷ்ய பிரதமர் டிமிட்ரி மெட்வதேவ் குரில் தீவிற்குச் சுற்றுப்பயணம் செய்தார். பிரச்சனைக்குரிய தீவுக்கு சுற்றுப்பயணம் செய்த ரஷ்ய பிரதமருக்கு ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இரண்டாம் உலகப்போரில் நேச நாடுகளிடம் ஜப்பான் சரணடைந்த சில நாட்களில், ஜப்பானின் வடக்கே உள்ள குரில் தீவுகளை ரஷ்யா ஆக்கிரமித்தது. இந்த தீவை மீண்டும் ஜப்பான் மீட்க கடந்த பல வருடங்களாக அந்நாடு முயற்சி செய்து வருகிறது.

இந்நிலையில், ரஷ்யப் பிரதமர் டிமிட்ரி மெட்வதேவ் ஆகஸ்ட் 22ஆம் தேதி குரில் தீவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். டிமிட்ரியின் இப்பயணத்திற்கு, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply