விருதுநகர் அருகே மீசலூரில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயில் வருஷாபிஷேக விழா நடந்தது.இதையொட்டி நேற்றுமுன்தினம் பவுர்ணமி பூஜை, அன்னதானம் நடந்தது. மாலையில் ஆன்மிக சொற்பொழிவு, இரவில் கணபதி பூஜை, லட்சுமி பூஜை, வேதபாராயணம், முதல் கால ஹோமங்கள் நடந்தன. நேற்று காலையில் யானையின் மீது பால் குடம் கொண்டு வரப்பட்டது. 10.30 மணிக்கு துவாரகமாயி, கோபுரம் கும்பாபிஷேகம் , ஷீரடி சாய்பாபா சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. மாலையில் விளக்கு பூஜை, சிறப்பு ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.