ரஷ்ய ஒலிம்பிக் போட்டி: இந்திய வீரர் முன்னேற்றம்.

ரஷ்யாவின் சோச்சி நகரில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் லுகெர் (LUGER) பிரிவுக்கான முதல் சுற்றில் இந்திய வீரர் ஷிவ கேசவன் அபாரமாக விளையாடி வெற்றி பெற்றார்.

முதல் சுற்றில் 53.90 நொடியில் ஷிவ கேசவன், 130.1 கிலோமீட்டர் கடந்து 35 வது இடத்தை பிடித்தார். இதற்கு முன்பு அவர் 38வது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் அதிக நம்பிக்கையுடன் சீறிப்பாயந்ததாக ஷிவ கேசவன் தெரிவித்தார்.

இன்று நடக்கும் இரண்டாவது மற்றும் 3வது சுற்றுகளுக்கு பின்னர் இறுதிச்சுற்றில் ஷிவ கேசவன் கலந்து கொள்வார். 4 முறை ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் கலந்துகொண்டுள்ள இவர், 2011ஆம் ஆண்டு ஆசியகோப்பையில் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply