மத்தியில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுமா? சிவசேனா அமைச்சர் தகவல்

anant geeteமகாராஷ்டிராவில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும் பா.ஜ.க. உறவை சிவசேனா துண்டிக்க விரும்பவில்லை என மத்திய அமைச்சர் மறைமுகமாக தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கூட்டணி அரசில் முக்கிய இடம் பெற்றுள்ள சிவசேனா கட்சியைச் சேர்ந்த ஒரே அமைச்சர் ஆனந்த் கீதே. இவர் மும்பையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது, ”நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியும் சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஆனால் மராட்டிய சட்டசபை தேர்தலில் தனித்தனியே போட்டியிட்டது. இந்த தேர்தலில் சிவசேனா பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று மராட்டிய சட்டசபையில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து இருந்தாலும், மத்தியில் இரு கட்சிகளின் கூட்டணி நீடிக்கும் என்றே நம்புகிறேன்.

ஆனாலும், இந்த பிரச்னையில் இறுதி முடிவை கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேதான் எடுப்பார்” என்றார். மேலும், பாரதிய ஜனதாவுடன் உறவை முறித்துக்கொள்ள தங்கள் கட்சி விரும்பவில்லை என்பதை அவர் மறைமுகமாக தெரிவித்தார்.

Leave a Reply