அம்மாவின் ஆசையை எப்போது நிறைவேற்றுவார் இளையதளபதி?

அம்மாவின் ஆசையை எப்போது நிறைவேற்றுவார் இளையதளபதி?

shobaஇளையதளபதி விஜய் படங்களில் செண்டிமெண்ட் காட்சிகள் குறிப்பாக அம்மா செண்டிமெண்ட் காட்சிகள் கண்டிப்பாக இருக்கும். விஜய்க்கு அம்மாவாக நடிக்கும் நடிகைகள் விஜய்யுடன் நடிக்கும்போது மட்டும் பாத்திரத்தோடு ஒன்றி நடிப்பது வழக்கம். இதற்கு சமீபத்திய உதாரணம் ‘தெறி’ படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்த ராதிகாவை கூறலாம்.

இந்நிலையில் விஜய்யின் உண்மையான அம்மா ஷோபாவுக்கு திரையிலும் விஜய்க்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளதாம். இதை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இந்த ஆசையை இதுவரை தன்னிடம் கூட கூறவில்லையே என்று ஆச்சரியப்பட்ட விஜய் அம்மாவின் ஆசையை அடுத்த படத்திலேயே நிறைவேற்ற முடிவு செய்துவிட்டாராம்.

‘தெறி’ படத்தில் விஜய்யின் மகள் திவ்யா, மகளாக ஒருசில காட்சிகளில் நடித்திருந்த நிலையில் விஜய்யின் அம்மாவாக ஷோபா அனேகமாக விஜய்யின் அடுத்த படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply