விஜய் தாயாருக்கு பிடித்த அஜித் படங்கள்

விஜய் தாயாருக்கு பிடித்த அஜித் படங்கள்
shobhaவிஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர், பிரபல வார இதழ் ஒன்றில் விஜய் குறித்து மனம் விட்டு பல விஷயங்களை தெரிவித்துள்ளார்.

விஜய்க்கும் அஜித்துக்கும் எவ்வித போட்டியும் இல்லை என்றும் இருவரும் சிறந்த நண்பர்கள் என்றும் கூறிய ஷோபா, சமீபத்தில் குட்டித்தல’ பிறந்தபோது விஜய் குடும்பமே சென்று பார்த்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் திரையில் விஜய்க்கு பொருத்தமான ஜோடி சிம்ரன் என்றும் சிம்ரனுடன் விஜய் நடித்த ‘ப்ரியமானவளே, ஒன்ஸ்மோர் ஆகிய படங்கள் தனக்கு பிடிக்கும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் அஜித்தின் படங்களும் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் குறிப்பாக அஜித் நடித்த வாலி, ஆசை, காதல் கோட்டை ஆகிய படங்கள் தன்னை கவர்ந்த அஜித் படங்கள் என்றும் ஷோபா சந்திரசேகர் கூறியுள்ளார்.

Leave a Reply