மேற்குவங்கத்தை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் எம்.பியும் பிரபல நடிகருமான டபாஸ்பால் என்பவர் சமீபத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியபோது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மீது எதிர்க்கட்சியினர் கைவைத்தால் அவர்கள் வீட்டுப்பெண்களை பலாத்காரம் செய்ய ஆள் அனுப்புவேன் என்று பேசியதால் அவருக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
மேற்கு வங்கத்தில் சவுமாகா என்ற பகுதியில் நடைபெற்ற திரிணாமுல் கட்சியின் பொதுக்கூட்டத்தில் முதன்முதலாக பேசிய டபாஸ்பால், தன்னுடைய பேச்சில், எதிர்கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள், அவரது மனைவி, சகோதரிகள் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை விடுகிறேன்., திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் யார் மீதாவது கைவைத்தால், நான் உங்களை சும்மா மாட்டேன். எனது ஆட்களை அனுப்பி உங்கள் வீட்டு பெண்களை பலாத்காரம் செய்ய சொல்வேன் என்று மிரட்டியுள்ளார். அதுமட்டுமின்றி எங்களது தொண்டர்களுக்கு ஆபத்து என்றால் நானே துப்பாக்கியை எடுத்து எதிரிகளை சுட்டுக்கொல்வேன் என்று கூறியுள்ளார். இது அந்ந பகுதியில் உள்ள உள்ளூர் கேபிள் டிவியில் நேரடியாக ஒளிபரப்பாகியுள்ளது. இவருடைய சர்ச்சை பேச்சினால் மேற்குவங்கத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டபாஸ்பாலின் பேச்சுக்கு அவருடைய கட்சித்தலைவர் மம்தா பானர்ஜியே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது ஒன்று சினிமா வசனம் அல்ல. பொதுக்கூட்டத்தில் பேசும்போது கவனத்துடன் பேசவேண்டும் என்று அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டபாஸ் பாலின் பேச்சுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்ததோடு அவர் மீது தேசிய மகளிர் ஆணையத்திடம் புகார் கொடுக்கப்போவதாக அறிவித்துள்ளது. மேலும் மக்களவை சபாநாயகரிடமும் புகார் அளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதனிடையே டாபாஸ் பால் திடீரென பல்டி அடித்துள்ளார். தான் பலாத்காரம் என்ற வார்த்தையை உபயோகிக்க வில்லை என்றும் ரெய்டு என்ற வார்த்தையையே உபயோகித்தாகவும் தெரிவித்துள்ளார்