பள்ளி மாணவர்களுக்கு இனி காலணி கிடையாது: தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கும் வழங்கப்பட்டு வரும் விலையில்லா காலணிகள் நிறுத்தப்படுவதாகவும், அத?ற்கு மாற்றாக 2020 ஆம் ஆண்டு முதல் ஷூ மற்றும் சாக்ஸ் வழங்குவது என்றும் தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது
இந்த நிலையில் சற்றுமுன்னர் இது தொடர்பாக தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 2020-2021ஆம் கல்வி ஆண்டில் இருந்து 6 முதல் 10 வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா காலணிகளுக்கு பதிலாக கால் ஏந்திகள் மற்றும் காலுறைகள் வழங்க நிர்வாக அனுமதி வழங்குதல் ஆணை வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
இதனையடுத்து இனி தனியார் பள்ளி, மாணவ, மாணவியர் போல் அரசு பள்ளி மாணவ, மாணவியர்களும் ஷூ, சாக்ஸ் அணிந்து செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது