பஞ்சாப் சட்டசபையில் அமைச்சர் மீது ஷூ வீச்சு.

பஞ்சாப் சட்டசபையில் அமைச்சர் மீது ஷூ வீச்சு.

punjabபஞ்சாப் மாநிலத்தில் தற்போது பிரகாஷ்சிங் பாதல் தலைமையிலான அகாலிதளம் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது அம்மாநிலத்தில் சட்டமன்ற கூட்டம் நடைபெற்று வந்த நிலையில் நேற்று சட்டசபை நடவடிக்கையின்போது திடீரென காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் வருவாய் துறை அமைச்சரின் மீது ஷூவை எறிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முதலமைச்சர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் முயன்று வரும் நிலையில் சமீபத்தில் அக்கட்சியில் எம்.எல்.ஏக்கள் தூங்கும் போராட்டத்தை சட்டசபையில் நடத்தினர்.

இந்நிலையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து பேச காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கேட்டதற்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்தர். இதனால் காங்கிரஸ், அகாலிதளம் எம்.எல்.ஏ.க்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அந்த நேரத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வரிசையில் இருந்து மாநில வருவாய் மந்திரி விக்ரம்சிங் மஜிதியாவை நோக்கி ஷூ வீசப்பட்டது. அந்த ஷூ அவர் மீது வந்து விழுந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சபாநாயகர் நேற்றைய சபை நடவடிக்கைகளை ரத்து செய்தார்.

Leave a Reply