மகாராஷ்டிர மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்யவந்த மத்திய அமைச்சர் நிதின் கட்காரியின் மீது செருப்பை வீச முயன்ற வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1uTWJDQ” standard=”http://www.youtube.com/v/mThJF5sFmks?fs=1″ vars=”ytid=mThJF5sFmks&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep1310″ /]மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் 15ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்துவரும் நிலையில், நேற்று இரவு மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவு கோரி தேர்தல் பிரசாரம் செய்துதார். நேற்று இரவு சுமார் 8 மணியளவில் அவர் கோத்ரூத் பகுதியில் பாரதிய ஜனதா வேட்பாளர் மேதா குல்கார்னி என்பவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்துகொண்டிருந்தபோது, அவர் மீது ஒரு வாலிபர் செருப்பை வீச முயன்றதாக கூறப்படுகிறது.
இதனால் அமைச்சர் அருகில் இருந்த பா.ஜ.க. தொண்டர்கள் மற்றும் பாதுகாவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அந்த வாலிபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்
அந்த வாலிபரை கைது செய்துள்ள போலீசார், தற்போது அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.