ஜெயிலில் போட வேண்டாம், என்னை சுட்டு கொன்றுவிடுங்கள்: பிலிப்பைன்ஸ் அதிபர்
என் மீதுள்ள குற்றம் நிரூபிக்கப்பட்டால் என்னை ஜெயிலில் போடாமல் சுட்டுக்கொன்றுவிடுங்கள், என்று பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே கூறியுள்ளார். இதனால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
போதை பொருள் கடத்தலை ஒழிக்க கடும் நடவடிக்கைகளை எடுத்து வரும் பிலிப்பைன்ஸ் பிரதமர், போதைப் பொருள் கடத்தல்கார்களை கண்டதும் சுட்டுக் கொல்லுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார். இதனால் தினமும் சுமார் 50 பேர் அந்நாட்டில் சுட்டுக்கொல்லப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அதிபரின் இந்த நடவடிக்கை நாட்டின் ஜனநாயகத்துக்கு ஆபத்தாக அமையும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதுகுறித்த வழக்கு ஒன்றும் பிலிப்பைன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று த்திரிக்கையாளர்களிடம் பேசிய அதிபர் ரோட்ரிகோ, ‘சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் என்னிடம் விசாரணை நடத்தலாம். இவ்வழக்கு குறித்து விசாரணை நடத்தும் போது நானும், பென்சவுடாவும் மட்டும் தான் இருக்க வேண்டும். நான் மனித இனத்திற்கு எதிராக குற்றங்கள் செய்தது நிரூபிக்கப்பட்டால் எனக்கு தண்டனை வழங்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. என்னை ஜெயிலில் போடாமல், சுட்டுக்கொன்று விடுங்கள்’ என கூறினார்