மனைவியுடன் ஷாப்பிங்கா? வருகிறது கணவர் பூத்; இது சீன அட்டகாசம்…!
மனைவியுடன் ஷாப்பிங் செல்லும் கணவர்களுக்கு, சாவகாசமாக ரெஸ்ட் எடுக்க பூத் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
உலகெங்கும் உள்ள மால்களில் நாம் வழக்கமாக பார்க்கும் காட்சி. மனைவி ஷாப்பிங் செய்யும் போது, மிகவும் கடுப்பாக அவர் பின்னாடியே செல்லும் கணவர். ஆனால் இதற்கு சீனா ஒரு தீர்வை கண்டறிந்துள்ளது. புதிதாக ’ஹஸ்பண்ட் ரெஸ்ட் பூத்’ என்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மனைவியோ அல்லது வேறு யாராவதோ ஷாப்பிங் செல்லும் போது, கணவரோ அல்லது மற்றவரோ பூத்தில் அமர்ந்து கொள்ளலாம். அங்கு மசாஜ் செய்யும் இருக்கை, கேம்ஸ் விளையாடும் வகையில் நீண்ட திரை அல்லது தொலைக்காட்சி வசதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதன் தயாரிப்பாளர்கள், உலகின் முதல் மினி – மேன் குகைகள் சீனாவில், அதுவும் ஷாங்காய் நகரில் அமைக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள மால் ஒன்றில் மொத்தம் 4 பூத்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதற்கு 40,000 yuan அல்லது $6000 செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பதிவு செய்யும் வசதியும் உண்டு. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமடையும் பட்சத்தில், மேலும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.