மாம்பழக் கன்னங்கள் வேண்டுமா?

p32b

‘மாம்பழத்தில் வைட்டமின்-ஏ மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் நிறைய இருப்பதால், சருமத்துக்கு இளமையான தோற்றம் தரும். இது சரும செல்களைப் புதுப்பிக்க உதவுவதோடு, சருமத்துக்கு எலாஸ்டிசிட்டியையும் தரும். வறண்ட சருமத்தை ஈரப்பதமாக்கும் சக்தியும் மாம்பழத்துக்கு உண்டு. வெயிலினால் ஏற்படும் சரும பாதிப்புகளையும் குணப்படுத்தும்’’ என்று சொல்வதுடன், மாம்பழத்தில் செய்துகொள்ளக்கூடிய சில ஹோம்கேர் பியூட்டி டிப்ஸ்களை வழங்குகிறார். இவர், சென்னை மற்றும் சிங்கப்பூரில் உள்ள ‘மியா’ பியூட்டி சலூனின் உரிமையாளர்.

மாம்பழ ஃபேஸ் க்ளென்சர்

மாம்பழத்தின் சதைப்பகுதி இரண்டு ஸ்பூனுடன், இரண்டு ஸ்பூன் கடலை மாவு மற்றும் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி… 15 நிமிடங்கள் காய்ந்ததும், முகத்தில் தண்ணீர் தெளித்து மசாஜ் கொடுத்துக் கழுவவும். முகத்தின் அழுக்குகளை நீக்கும் க்ளென்சராக மட்டும் இல்லாமல், வெயிலினால் ஏற்படும் சரும கருமையையும் நீக்கிவிடும்.

மாம்பழ பாடி ஸ்க்ரப்

ஒரு மாம்பழத்தின் சதைப்பகுதியுடன் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் இரண்டு ஸ்பூன் பால், நான்கு ஸ்பூன் சர்க்கரை கலந்துகொள்ள வேண்டும். குளித்ததும் இதை உடல் முழுவதும் தடவி, 5 நிமிடங்களுக்கு தேய்த்து, வெதுவெதுப்பான நீரில் உடலை அலசி, பின்னர் குளிர்ந்த நீரில் மீண்டும் அலசவும். இதை வாரம் இரண்டு நாட்கள் வீதம் தொடர்ந்து செய்தால், சருமம் மென்மையாகவும் மினுமினுப்பாகவும் இருக்கும். 

மாங்காய் ஆஸ்ட்ரிஜின்

தேவையான அளவு தோல் நீக்காத மாங்காய்த் துண்டுகளைத் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். பிறகு ஆறவிட்டு, வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்துக்கொள்ளவும். தேவையானபோது சிறிது பஞ்சை இந்த நீரில் நனைத்து முகத்தில் ஒற்றி எடுத்தால், திறந்திருக்கும் சருமத்துளைகள் மூடிக்கொள்ளும். கடைகளில் கிடைக்கும் ஆஸ்ட்ரிஜினுக்கு நிகரானது இந்த இயற்கை ஆஸ்ட்ரிஜினான மாங்காய்ச் சாறு. 

மாம்பழ ஃபேஸ் பேக்

மாம்பழத்தின் சதைப்பகுதி இரண்டு ஸ்பூன் எடுத்துக்கொண்டு அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் ஒரு ஸ்பூன் பாதாம் எண்ணெய் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்களுக்குப் பிறகு கழுவவும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்த `ஃபேஸ் பேக்’கை உபயோகித்தால்… முகம் மிருதுவாகவும், பொலிவாகவும் இருக்கும்!

Leave a Reply