மதுபான விடுதியில் அழகிகள் மீது பணத்தை வீசக்கூடாது. சுப்ரீம் கோர்ட் உத்தரவு

மதுபான விடுதியில் அழகிகள் மீது பணத்தை வீசக்கூடாது. சுப்ரீம் கோர்ட் உத்தரவு

bar dancersஇந்தியாவில் உள்ள மதுபான விடுதிகளில் நடனமாடும் அழகிகள் மீது பணத்தை வீசுவது பெண்களின் கண்ணியத்துக்கு விரோதமானது” என சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் மதுபான விடுதிகளில் அழகிகளின் நடனத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்த போதிலும், அங்கு அழகிகளின் நடனத்தை ஒழுங்குபடுத்தும் வகையில், மாநில அரசு சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது. அதன்படி மதுபான விடுதிகளில் நடனமாடும் அழகிகளை வாடிக்கையாளர்கள் சூழ்ந்து கொண்டு அவர்கள் மீது ரூபாய் நோட்டுகளை வீசக்கூடாது என்றும், அழகிகளின் நடனம் நடைபெறும் இடத்துக்கு அருகாமையில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்றும் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது.

இந்த சட்டத்தை எதிர்த்து மதுபான விடுதி உரிமையாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் சி.நாகப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

“அழகிகளின் நடனத்துக்காக அவர்களை பணமழையில் நனைய வைப்பது வெறும் ‘டிப்ஸ்’ போன்றது தான். இதே நிலைமை சினிமா பாடகர்களுக்கு அனுமதிக்கப்படுகிறது. ஆனால், நடன அழகிகளுக்கு கடுமையாக மறுக்கப்படுகிறது. இதனை நீக்க வேண்டும்” என்று மதுபான உரிமையாளர்களின் வழக்கரிஞர் வாதாடினார். ஆனால் இந்த வாதத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர். இதனையடுத்து நீதிபதிகள், பிறப்பித்த உத்தரவின் விவரம் வருமாறு:-

மாநில அரசின் சட்ட திருத்தம் பெண்களின் கண்ணியத்துக்கு மதிப்பு அளிக்கிறது. நாகரிகத்தையும், கலாசாரத்தையும் காக்கிறது. மதுபான விடுதிகளில் நடனமாடும் அழகிகள் மீது பணத்தை வீசுவது அவர்களின் கண்ணியத்துக்கு எதிரானது. தவிர, பெண்கள் மீது பணத்தை வீச இது ஒன்றும் வெள்ளித்திரை அல்ல. நடனமாடும் அழகிகளுக்கு என்று சில கண்ணியம் இருக்கிறது. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

Leave a Reply