விஜய் நடித்த ஜில்லா படத்தில் இடம்பெற்ற கண்டாங்கி கண்டாங்கி பாடலை பாடிய பிரபல பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு நேற்று இரவு குடும்பத்தார் முன்னிலையில் திருமணம் நடந்துள்ளது.
ஏற்கனவே ஸ்ரேயா விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக என வதந்திகள் பரவியநிலையில் நேற்று இரவு பத்திரிகையாளர்கள் மற்றும் திரையுலகினர்களுக்கு அழைப்பு விடுக்காமல் திடீரென திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.
மும்பையை சேர்ந்த தொழிலதிபர் ஷைலாதித்யாதான் ஸ்ரேயாவின் மாப்பிள்ளை. நெருங்கிய நண்பரான சைலாதித்யாவை திருமணம் செய்துள்ளதாகவும், ஒரு புதிய வாழ்க்கையை உற்சாகமாக தொடங்கவுள்ளதாகவும் ஸ்ரேயா கோஷல் தன்னுடைய டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
ஸ்ரேயா கோஷலுக்கு திரையுலகினர் பலரும் டுவிட்டரில் வாழ்த்துகளை பரிமாறி வருகின்றனர். ஒரு பாடகிக்கு ஹீரோயின் அளவிற்கு ரசிகர்களும், வரவேற்பும் இருக்கிறது என்றால் அது ஸ்ரேயா கோஷலுக்குத்தான். இது ஒரு பக்கம் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியான விஷயம்தான்.