சீனியர் நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க தயக்கமில்லை. ஸ்ரேயா

shreya saranஎனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஸ்ரேயா,மழை, திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி, அழகிய தமிழ்மகன், கந்தசாமி போன்ற வெற்றிப் படங்களில் நடித்தார். ஆனால் அதன்பின்னர் அவருக்கு தமிழில் வாய்ப்புகள் குறைந்ததல் தற்போது தெலுங்கில் நடித்துக்கொண்டு வருகிறார்.

தெலுங்கில் இளம் நடிகைகளின் போட்டிக்கு ஈடுகொடுக்க முடியாததால், சீனியர் ஹீரோக்களுக்கு மனைவியாக நடித்தார். ‘மனம்’ என்ற தெலுங்கு படத்தில் நாகார்ஜுனனுக்கு மனைவியாக நடித்த அவர் தற்போது வெங்கடேஷுக்கு ஜோடியாக ஒரு படத்தில் மனைவியாக நடித்து வருகிறார்.

இதுகுறித்து ஸ்ரேயா கூறியதாவது, “வெங்கடேஷ், நாகார்ஜுனன் போன்ற சீனியர் ஹீரோக்களுக்கு மனைவியாக நடிப்பதில் எனக்கு எவ்வித ஆட்சேபமும் இல்லை. எனது கேரக்டர் நன்றாக அமைந்தால் எந்த வேடத்திலும் நடிக்க தயார் என்று கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ள ஸ்ரேயா, தற்போது ராஜராஜ சோழனின் போர்வாள் என்ற தமிழ் படத்திலும், கோபாலா கோபாலா என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.

Leave a Reply