விஜய்யுடன் நடிக்க தயங்கும் முன்னணி நடிகைகள். திடுக்கிடும் தகவல்

விஜய்யுடன் நடிக்க தயங்கும் முன்னணி நடிகைகள். திடுக்கிடும் தகவல்
vijay and shruthi
இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள ‘புலி திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அவர் நடித்து வரும் ‘விஜய் 59’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அட்லி இயக்கி வரும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமிஜாக்சன் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் ‘வேதாளம்’ தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க விஜய் ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கும் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிக்க நயன்தாரா மற்றும் ஸ்ருதிஹாசனுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், ஆனால் இருவரும் மீண்டும் விஜய்யுடன் நடிக்க தயங்குவதாகவும் கூறப்படுகிறது.

தமிழில் ஸ்ருதிஹாசன் நடித்த 3, ஏழாம் அறிவு, பூஜை, புலி ஆகிய படங்களில் இதுவரை எந்த படமும் சூப்பர் ஹிட் ஆகவில்லை. எனவே அவரது கவனம் முழுவதும் தெலுங்கு மற்றும் இந்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் மட்டுமே நடித்து வரும் நயன்தாரா விஜய் படத்தில் நடித்தால் தனது நடிப்புக்கு பெரிதாக வேலையிருக்காது என்பதால் நடிக்க தயங்குவதாக கூறப்படுகிறது. விஜய் படத்தில் நடிக்க நான், நீ என்று போட்டி போடும் வரும் நிலையில் இருவருமே விஜய்யுடன் நடிக்க தயங்கி வரும் பெரும் அதிர்ச்சியாக இருப்பதாக கோலிவுட் பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply