திருமணத்தின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. ஸ்ருதிஹாசன் அதிரடி பேட்டி

shruthiதமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பிசியாக நடித்து வரும் ஸ்ருதிஹாசன், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றும் திருமணம் செய்யாமலேயே கடைசி வரை இருக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

தமிழில் அஜீத்துடன் ‘அஜீத் 56’, விஜய்யுடன் ‘புலி மற்றும் தெலுங்கில் மகேஷ் பாபுவின் ‘ஸ்ரீமந்துடு ஆகிய படங்களில் நடித்து வரும் ஸ்ருதிஹாசன், பாலிவுட்டில் ‘வெல்கம் பேக்’ படத்தின் இரண்டாம் பாகம், மற்றும் ‘யாரா’, ‘ராக்கி ஹேண்ட்சம்’ என ஒரே நேரத்தில் பல பெரிய நடிகர்கள் மற்றும் பெரிய பட்ஜெட் படங்களில் நடித்துவருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் முன்னணி பாலிவுட் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த ஸ்ருதிஹாசன், திருமணம், குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போது, ‘தனக்கு திருமணம் செய்துகொள்ளும் எண்ணமே இல்லை’ என்றும் திருமணம் செய்த தம்பதிகளுக்குள் வேறு வேறு எண்ணங்கள் உண்டாகும் போது வாழ்க்கையில் நிம்மதி இல்லாத நிலை உண்டாக வாய்ப்பு இருப்பதால் தான் திருமணத்தை விரும்பவில்ல’ என்றும் கூறியுள்ளார்.

சிறுவயதில் தனது தாய்-தந்தையர் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்த சம்பவத்தை ஸ்ருதிஹாசன் இன்னும் மறக்கவில்லை என்பதையே அவர் கூறும் கருத்துக்கள் நிரூபிப்பதாக கூறப்படுகிறது.

மும்பையில் சொந்த வீடு வாங்கி தனியாக வசித்து வரும் ஸ்ருதிஹாசன், கடைசி வரை தனியாரா இருந்துவிடுவாரா? என்பது போகப்போகத்தான் தெரியும்.

Leave a Reply