மும்பை தொழிலதிபருடன் ஸ்ருதிஹாசன் திருமணமா?
சமீபத்தில் பிரபல நடிகை அசின் மும்பை தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட நிலையில் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசனும் மும்பை தொழிலதிபர் ஒருவருடன் நெருக்கமாக பழகிவருவதாகவும் விரைவில் இவர்களது திருமணம் நடைபெறும் என்றும் வதந்தி கிளம்பியுள்ளது.
இந்த வதந்தியை ஸ்ருதிஹாசன் கேஷுவலாக எடுத்துக்கொண்டு ‘OK Then’ என்று நகைச்சுவையாக தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
மேலும் இதுகுறித்து ஸ்ருதிஹாசனுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தபோது, ‘ஸ்ருதிஹாசன் தற்போது பிரேமம்’ தெலுங்கு ரீமேக் படத்திலும், தந்தை கமல்ஹாசனுடன் ‘சபாஷ் நாயுடு’ படத்திலும், சூர்யாவுடன் ‘சிங்கம் 3’ படத்திலும் நடித்து வருவதாகவும், இப்போதைக்கு அவரது கவனம் சினிமாவில் மட்டுமே இருப்பதாகவும், திருமணம் குறித்த அறிவிப்பை நேரம் வரும்போது அவர் முறைப்படி வெளியிடுவார் என்றும் தெரிவித்துள்ளனர்.