ஸ்ருதிஹாசனுக்கு கமல் பார்த்த அமெரிக்க மாப்பிள்ளை

ஸ்ருதிஹாசனுக்கு கமல் பார்த்த அமெரிக்க மாப்பிள்ளை
kamal
உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கவுள்ள ‘சபாஷ் நாயுடு’ படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் டைட்டிலில் ஜாதி பெயர் உள்ளதாக சமீபத்தில் சர்ச்சையும் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் நடிகையும் கமலின் மூத்த மகளுமான ஸ்ருதிஹாசன் கமலின் மகளாக நடிக்கின்றார். மேலும் இதே படத்தில் ஸ்ருதியின் தங்கை அக்ஷரா உதவி இயக்குனராக பணிபுரியவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 16ஆம் தேதி அமெரிக்காவில் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகரை கமல் தறோது தேர்வு செய்துள்ளார். ஸ்ருதிஹாசனுக்கு ஜோடியாக மனு நாராயணன் (Manu Narayan) என்பவர் நடிக்கவுள்ளார். இவர் ஹாலிவுட் படங்களில் நடிக்கும் ஒரு நடிகர் மட்டுமின்றி தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் மற்றும் சாக்ஸோபோன் வாசிப்பவர் என பல்வேறு திறமைகள் கொண்டவர். இவர் தற்போது அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டாலும் பிறப்பால் ஒரு இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் Good Night Good Morning, Wall Street, போன்ற ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார்.

கமல்ஹாசன் மற்றும் அவரது மகள் ஸ்ருதிஹாசனுடன் நடிப்பது குறித்து மனு நாராயணன் கூறியபோது, “சிறுவயதில் கமல் படங்களை எனது பெற்றோர்களுடன் சேர்ந்து பார்த்துள்ளேன். ஆனால் இப்போது அவர் படத்தில் நடிக்கின்றேன் அதுவும் அவரது மகளுக்கு ஜோடியாக நடிப்பதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.

Leave a Reply