படப்பிடிப்பு ஒன்றுக்காக டேராடூன் சென்றிருந்த நடிகை ஸ்ருதிஹாசனை குடிபோதையில் ரசிகர் ஒருவர் தகராறு செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ஸ்ருதிஹாசனை டேராடூன் போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகை ஸ்ருதிஹாசன் ஒரு இந்திப்படத்தின் படப்பிடிப்பிற்காக டேராடூன் சென்றிருந்தார். அங்கிருந்த ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தபோது, நள்ளிரவில் ஸ்ருதிஹாசன் தங்கியிருந்த ஓட்டல் அறையின் கதவை குடிபோதையில் ஒருவர் பயங்கரமாக தட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ருதிஹாசன் அவரது மேனேஜர் மூலம் டேராடூன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இது சம்மந்தமாக காவல்துறையினர் சிர்ஸா என்ற இனத்தை சேர்ந்த ஒருவரிடம் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் ஸ்ருதிஹாசனிடம் விசாரணை செய்ய அவரை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு டேராடூன் போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். இன்று மாலை ஸ்ருதிஹாசன் காவல்நிலையத்தில் ஆஜராவார் என்று கூறப்படுகிறது.