சூப்பர் ஸ்டார் மகனுடன் ஸ்ருதிஹாசன் காதல். ஸ்ரேயா அதிர்ச்சி.

கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் மகனுடன் சேர்ந்து நடிக்க கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

ஸ்ருதிஹாசன் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,இந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து  வருகிறார். இந்நிலையில் கன்னட சூப்பர் ஸ்டார் மகன் புனித் ராஜ்குமார் நடிக்கும் புதிய படம் ஒன்றில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த வாய்ப்பை ஸ்ருதிஹாசன் மிக மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.

முதல்முதலாக புனித் ராஜ்குமாருடன் ஜோடி சேரும் ஸ்ருதிஹாசனுக்கு இந்த படம் ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என கன்னட சினிமா பிரபலங்கள் கூறுகின்றனர். புனித் ராஜ்குமாருக்கு காதலியாக நடிக்கும் ஸ்ருதிஹாசன், படம் முழுவதும் உலா வரும் வெயிட்டான கேரக்டர் என்பதால் உடனே சம்பளம் குறித்து கூட பேசாமல் ஒப்புக்கொண்டார்.

முதலில் இந்த வேடத்தில் ஸ்ரேயா நடிப்பதாக இருந்தது. ஆனால் புனித் ராஜ்குமாரின் பரிந்துரையால் ஸ்ரேயா நீக்கப்பட்டு ஸ்ருதி ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதனால் ஸ்ரேயா அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. வரும் ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.

Leave a Reply