முதல்வருக்கு மனநிலை பாதிப்பு. சிகிச்சை செலவு செல்ல பாஜக தொண்டர்கள் தயார். சி.டி. ரவி பேச்சு

siddharamayaaபிரதமர் நரேந்திரமோடி இந்தியாவின் ஹிட்லர் என்று பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அவருக்கு காங்கிரஸ் சிகிச்சை அளிக்க முன்வந்தால் பாரதிய ஜனதா தொண்டர்களே அதற்குரிய செலவை ஏற்றுக்கொள்வார்கள் என்றும் பாஜக முன்னாள் அமைச்சர் சி.டி. ரவி எம்.எல்.ஏ பதிலடி கொடுத்துள்ளார்.

நேற்று பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய சி.டி.ரவி, ‘கர்நாடக முதல்வர் சித்தராமையா, எந்த அடிப்படையில் பிரதமரை ஹிட்லருடன் ஒப்பிட்டு பேசினார் என்பதை விளக்கவேண்டும். அவர் சில காலமாக மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. அவருக்கு மனநிலை பாதிப்பு சம்பந்தமாக உயர் ரக சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம். இதற்கு காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்தால் அதற்கான மருத்துவ சிகிச்சை செலவை பா.ஜ.க. தொண்டர்களே ஏற்றுக் கொள்வார்கள்.

காங்கிரஸில் தற்போது தலைமை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அதன் இரண்டாம் கட்ட தலைவர்கள் கதிகலங்கி உள்ளனர். காங்கிரஸ் இல்லாத இந்தியாவை விரைவில் உண்டாக்குவதே பிரதமர் மோடியின் குறிக்கோள். அந்த குறிக்கோளை அவர் விரைவில் நனவாக்குவார்.

இவ்வாறு சி.டி.ரவி செய்தியாளர்களிடம் கூறினார்.

Leave a Reply