செயல்படும் எண்ணங்கள் உள்ளவரை தூக்கமும் உண்டு. எண்ணங்களும் தூக்கமும் ஒரே பொருளின் இரு பக்கங்கள்.
நாம் அதிகமாகவும் தூங்கக் கூடாது, தூங்காமலும் இருக்கக் கூடாது, மிதமாகத் தூங்க வேண்டும். அதிகமான தூக்கத்தைத் தவிர்க்க, எண்ணங்கள் இல்லாது இருக்க வேண்டும். சத்துவ குணத்தை வளர்க்கும் உணவினைத்தான் அளவாக உண்ண வேண்டும். அதிகமான உடல் செய்கைகளில் ஈடுபடக் கூடாது.
“என்னால் மனத்தை ஒருமுகப்படுத்த முடியவில்லை” என்ற எண்ணம் ஏன் எழ வேண்டும்?
தன்னை உணரும் வரை முயற்சி தேவை. ஆன்ம சாட்சாத்காரம் முயற்சியின்றியே நிகழ வேண்டும். இல்லையேல் மகிழ்ச்சி முழுமை ஆகாது. இயல்பான அந்நிலையை அடையும் வரை ஏதாவது ஒரு வடிவத்தில் முயற்சி தேவை.
தன்னை உணர தெய்வீக அருள் கட்டாயம் தேவை. ஆனால் உண்மையான பக்தனுக்கு அல்லது யோகிக்கு மட்டுமே அருள் கிட்டும். விடுதலைப் பாதையில் இடைவிடாது கடுமையாக உழைப்பவர்க்கே அது தரப்படுகிறது.
நாம் முயற்சி செய்யவும் வேண்டும். குருவின் உதவியும் நமக்குக் கட்டாயம் தேவை.
உன்னுடைய முயற்சி என்பது எண்ணங்களால் திசை திருப்பப்படுவது அன்று.
பயிற்சி கட்டாயம் தேவை. அதுவே அருள்.