அதாவது சிவன் இருக்கும் இடங்களில் அதிகம் சித்தர்கள் இருப்பபதன் காரணம் என்ன?யோக சாஸ்திரத்தில் சிவன் என்பவன் கடவுள் அல்ல…. ஆதி சித்தன். அதாவது முதல் சித்தன். சித்தர்கள் வேதங்கள் ஓதுவதை காட்டிலும், தியானம், தவம், ஆத்மாவை அர்பணித்தல் போன்ற வழிகள் மூலமாக இறைவனை அடைய முடியும் என்பதை நிரூபித்தவர்கள். அவர்கள் இந்த முறைகளையே பின்பற்றினர். சித்தர்கள் சிவனை கடவுளாக பார்ப்பதை விட குருவாக தான் பார்கிறார்கள்…. குரு இருக்கும் இடத்தில தானே சிஷ்யர்களுக்கு வேலை. அதனால் தான் இந்த நிலை.
கேள்வி 2: சாதாரணமாணவர் ஜீவ சமாதிக்கும் சித்தர்களின் ஜீவ சமாதிக்கும் என்ன வித்தியாசம்? ஜீவசமாதி என்றால் ஜீவனை சமாதியாக்குவது என்று பொருள். ஜீவன் என்பது உயிர். சமாதி என்றால் கட்டிடம் என்றோ, புதைத்தவர்களின் மேல் எழுப்பப்படும் கட்டுமானம் என்றோ கருத வேண்டாம்….. சமாதி என்பது சம்+ஆதி என்று பொருள் படும். அதாவது மனம்+ஆதி. ஆத்மாவானது உடலை அடையும் போது எவ்வளவு தூய்மையாக இருந்ததோ அதே தூய்மையை மீண்டும் பெற்று உன்னத நிலையை அடைவது என்று பொருள். ஒவ்வொருவரும் பிறக்கும் போது தூய்மையான அத்மாவாகதான் பிறக்கிறோம். ஆனால் வளரும் போது, காலம் செல்ல, உலகம் என்னும் மாயையில் சிக்கி பல பாவங்களை செய்கிறோம், ஒவ்வொரு நாளும் பாவத்தின் கணக்கை கூட்டி ஆத்மாவனத்தை அசுத்தம் செய்கிறோம். ஆக ஜீவசமாதி என்பது உயிர் என்ற ஆத்மாவானது, ஒரு உடலை தேர்ந்தெடுத்து அதில் சஞ்சரிக்கும் போது, எவ்வளவு தூய்மையாக இருந்ததோ, அதே தூய்மையான நிலையை மீண்டும் அடைந்து பரமாத்வாவிடம் ஒருங்கிணைவது என்று அர்த்தம். இதை செய்வது என்பது சாதாரண விஷயம் அல்ல. தியானம், தவம், கடுமையான விரதங்கள், என கடுமையான மனநிலைகளை கடந்து தான் இந்த ஜீவ சமாதியை நம்மால் அடையமுடியும்.ஒருவர் ஜீவசமாதி ஆகும் போது அவரின் உடல் அழுகுவது இல்லை. மாறாக ஜீவனற்ற அந்த உடல் சுருங்கி, வற்றி போகும். கெட்டு போகாது இது எப்படி என்ற கேள்வி வரலாம்…… விடை காயகல்ப்பம். காயகல்ப்பம் என்பது இரண்டு வகைப்படும் ஒன்று நாம் உட்கொள்ளுவது அதாவது மூலிகை தயாரிப்பு. மற்றொன்று சுவாச பயிற்சி. இங்கே ஜீவசம்மதி அடைபவர்கள் இரண்டாவது வகை காயகல்பத்தில் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள். இந்த சுவாச பயிற்சியின் படி, ஒருவர் மூச்சை அடக்கி, மூச்சு விடாமல் உயிர் வாழ முடியும். இதய செயல்பாடு, மூளை செயல்பாடு, மன ஓட்டங்கள் என அனைத்தையும் நிறுத்திவைத்து ஆன்மாவை மட்டும் விழித்திருக்க செய்வார்கள். உடலில் ஆன்மா இருக்கும் ஆனால் மூளை செயல்பாடு, இதயத்துடிப்பு இல்லாமல் போவதால், உயிரற்ற உடலை போல் தெரியும். இவ்வாறு ஜீவசமாதி ஆகும் மகான்கள் தங்கள் உடலை விட்டு பஞ்சபூத நிலைகளில் எந்த நிலையில் வேண்டுமானாலும் தங்களின் ஆத்மாவை உருவகம் செய்துகொள்ள முடியும் என்று அகத்தியர் கூறுகிறார். பொதுவாக ஜீவசமாதி அடைபவர்கள் உலக நன்மைக்காக வேண்டியே அதை செய்வார்கள். அப்படி செய்யும்போது அந்த எண்ணங்கள் அவர்கள் உடலோடு ஒன்றி இருக்கும். அந்த எண்ணங்களின் அதிர்வுகள் (vibrations) அந்த ஜீவசமாதியின் மீது இருக்கும் கட்டுமானங்களில்எதிரொலித்து கொண்டே இருக்கும். நாம் அவற்றை வலம்வரும் போது, அந்த அதிர்வுகலானது நம் மனதையும் தாக்கி, அதை தூய்மை செய்து, நல்ல சிந்தனைகளை நம் மனதிற்குள் விதைத்துவிடும் ……… பல மகான்கள் ஜீவசமாதியை தேர்ந்தெடுக்க இதுவே முக்கிய காரணம். மறுபுறம் சாதாரண மனிதர்களின் சமாதி என்பது இப்படி இல்லை. அவர்களின் உடல் அழுகிவிடும். எந்த ஒரு அதிர்வுகளும் இருக்காது. ஏனென்றால் அவர்களுக்கு இந்த சூட்சமங்கள் தெரியாது. தெரிந்தவர்கள் மகான்கள் ஆகிறார்கள். சூட்சமத்தை பயன்படுத்தி ஜீவசமாதி அடைகிறார்கள்