ஹாலிவுட் நடிகர்களை போல தற்போது இந்திய நடிகர், நடிகைகளூம், இணையத்தில் தங்கள் படத்தின் விவரங்களை தங்களது ரசிகர்களுக்கு தெரிவித்து வருகின்றனர். பெரும்பாலான தமிழ் நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் தங்களது எண்ணங்களை தங்களது ரசிகர்களுடன் பகிர்ந்து வருகின்றனர்.
த்ரிஷா, சமந்தா, டாப்ஸி போன்ற முன்னணி நடிகைகள் தினமும் டுவிட்டரில் தங்கள் எண்ணங்களை பகிர்ந்து வருகின்றனர். இவர்களுக்கு ஏராளமான ஃபாலோயர்கள் உள்ளனர். ஆனாலும் இதில் நடிகர் சித்தார்த் ஒரு புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளார். தென்னிந்திய நடிகர்களிலேயே ஒரு மில்லியன் ஃபாலோயர்களை இன்று எட்டியுள்ளார் நடிகர் சித்தார்த். இதற்காக அவர் இன்று தனது டுவிட்டர் தளத்தில் டுவிட்டர் ஃபாலோயர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.